"வாதாபியின் காதல்"பரஞ்சோதி,

திண்ணிய திடமான உடல் கொண்டவன். 
நிமிர்ந்த நடையும், நேர்முக பார்வையும் கொண்டவன்.
யாரையும் கண்டு அஞ்சாத உறுதி கொண்டவன்.
இயலா நிலை என்பதை அறியாதவன்.
போர்க்களம் பல கண்டு; அதன் பரிசாக அறுவது வடுக்கள்
கொண்டவன். ஆயிரம் பேர் கொண்டு எதிர்ப்பினும்; 
தன் வாளாற்றலால் எதிரியை அஞ்சி ஓட செய்பவன்.
நரசிமவர்மபல்லவனின்  படைத்தளபதி.


'அவன்- பரஞ்சோதி'

"பன்னிரெண்டாயிரம் களிர்களை கொண்டு வருகிறேன்.
 இருபத்தாயிரம் புரவிகள் கொண்டு வருகிறேன்.
எண்ணற்ற படைஞர்கள் கொண்டு வருகிறேன்.
என் மாமன்னன் நரசிமன்னோடு , இலங்கையின், 
இளவரசன் மனவர்மண்ணோடு வருகிறேன்.
உன் கரு விழிகளை ரசிப்பதற்கு இல்லை!
என் காதலை சொல்லி உன்னை
 வென்று செல்லவும்  இல்லை!
உன்னாடின்மிது படை எடுத்து வருகிறேன் என் உயிரே!
உன் ஊங்கன்னோர் புலிகேசியை வீழ்த்தி
வாதாபி கொள்ள வருகிறேன்!!"

இருண்டு வருடம் முன்பு;

"அன்று நான் வாதபியில் ஒரு வழிப்போக்கன். 
நடராஜன் நடமாடும் குகை கோவிலில் உன்னை முதலில்
கண்டேன். உன் நிலவென தோய அழகில்; உன்
கருமேகம் போல் அடர்ந்த கூந்தலில்,
உன் புனைவனப்பில், உன் வசிகரிக்கும் மெல்லிய குரலில்
காதல் கொண்டேன்.நீ புலிகேசியின் மகள் என்று அறியேன்;
வாதபியின் இளவரசி என்றும் அறியேன் அன்று.

இன்று உன்காதல் பார்வையில் என் கூர்வாள் தோற்கதோ?
உன்னை கண்டவுடன் என் தாய்நாடு மறப்பேனோ?
என் உயிரே நான் வரும் முன்பு,
நீ வாதப்பி விட்டு செல்வாயோ?
நீயே என் ஆருயிர் என நீ உணர்வையோ?
என் தாய்நாட்டிற்காண கடமை இதுவென உண்ணர்ந்து
என்னை நீ மன்னிப்பாயோ?'திரிலோக பார்வதி தேவி ', 

நடனம் ஆடும் அவள் நடை!
கவிதை பாடும் ஆவல் கரு விழிகள்!
மெல்லிய இடையும், நுண்ணிய அறிவும் கொண்டவள்.
அழகிய சிரிப்பும், கூறிய திறனும் கொண்டவள்.
வாள்திரனும் கொண்டவள், வாய்திரனும் கொண்டவள்.
புலிகேசியின் கடைசி மகள்; வாதபியின் இளவரசி.
அரண்மனை விரும்பாதவள்,
மக்களளோடு வாழள விரும்புபவள்.
அவளை கண்டு மயங்காத ஆண்மகனும் இல்லை!
அவள் குறளை கொண்டு மயங்காத உயிரினமும் இல்லை.

'அவள் - திரிலோக பார்வதி' 

"நீ வருவாய் என்று நான் அறிவேன்.
எனினும் வாதாபி மீது, என் நாட்டின் மீது
படை கொண்டு வருவாய் என நான் அறியேன்.
கண்களில் கண்ணிற்ரோடு காத்திருகின்றேன்.
இதயத்தில் உன்னை கொண்டு,
கைகளில் வாளினை கொண்டு காத்திருகின்றேன்.
என்னுள் உன்மேல் கொண்ட காதலையும், உன்னையே 
கொல்ல துணிவையும் கொண்டு காத்திருகின்றேன்!"

இரண்டு வருடம் முன்பு 

"வாதாபியின் குகை கோயிலில் உன்னை கண்டன்.
நீ நரசிமாவர்மபலவனின் படைத்தலைவன் என்று
அறியேன் நான் அப்போது.
உன் நேர்மை பேச்சில்; உன் கலை அறிவில்,
உன் மயக்கும் பார்வையில், உன் ரசனையின் தேடலில்.
நான் காதல் கொண்டேன்.
உன்னிடம் காதல் கொள்ளாமல் நான் எவரிடம் கொள்வேனோ?
உன்னிடம் என்னை நான் மறந்தேன் அன்று.

இன்று என் தாய்நாட்டிற்கான கடமையில்
என் காதல் மறப்பேனோ?
உன்னை நான் கொல்ல நேர்ந்தால் என்னுயிர் மடிப்பேனோ?
நீ நரசிமவர்மனின் படை விலகி செல்வாயோ?
எதுவெனினும் என் காதலை நீ உணர்வையோ?
என்னையும் நீ அறிவையோ?
என் நிலையையும் நீ புரிவாயோ?
என்னை  நீ மன்னிப்பாயோ?
மறுபிறப்பில்லாவது என்னை துணை என நீ கொள்வாயோ?
(Have a glance: I have made a fictious story here based on some true history.


The true facts:
Paranjothi- general in Narashimavarman army and Narashimavarman's close friend potryed as a brave warrior and as one who played major role in Vatapi battle. A Lord Shiva devotee. Became one among the 63 nayanmars later.

Narasimavarman- the great pallava king who established a vast empire. He likely destroyed pulikaesin the Chalukya king.

Vatapi (வாதாபி)- or called as Badami is the capital of Chalukyas.
the famous battle of vatapi is where narasimavarma pallavan destroyed pulekesin and had vengeance over pulikesi's previous raids on Kanchipuram the Pallava capital. he likely to have attacked with over a hundred thousand men

Pulikesi - the Chalukya king, who is very powerful and highly appreciated for his administration. 

Manavarman: the Srilankan prince. He and his army assisted Narashimvarman's army  who was later helped by Narashimvarman's army in Srilanka to regain his throne.

The fiction:
Triloka Parvathi - the brave beautiful intelligent princess who is likely to have born out to Pulikesin and one of his many queens is my fictious character.

the love is again my fiction but who knows? Out of the many princess of Vatapi. Paranjothi could have actually fallen in love with a princess too ;)

  

Comments

 1. திரிலோக பார்வதி யின் வீர காதல்.. மிக அருமை ! கற்பனை காதல் !
  சிவகாமி யின் சபதத்தில் பரஞ்சோதியின் காதல் கதை மிக குறைவு...
  இதன் முடிவு என்ன... வீழ்ந்தது வாள்களா? காதலா ?
  போர்களத்தில் காதலர்களின் சந்திப்பு இருந்தால் இன்னும் சற்று நன்றாக இருக்கும்...
  அர்ஜுனன் படை எடுக்க அஞ்சியது போல் காதலர்கள் தடுமாற்றம்...

  ReplyDelete
 2. :)
  lovely to read that comment...thanks a lot....and abt the end i thought i will leave it to ur imagination because didnt want to twist real history too much ....well maybe i will write a sequel

  ReplyDelete
 3. ur command over the language is too good...
  rendu kathalargala, oru yutha kalathula sandikka vachutiye pa...
  Its been ages since i have read tamil kavithai's...am seeing a lot in ur blogs and this one, especially is amazing...
  need to meet u some day (not like some busy schedule like jamfest) and need to listen to ur knowledge on tamil historypa....
  Keep it up!!!!

  ReplyDelete

Post a Comment

Popular Posts