ஒரு அமைதி கூடல் - நீதி தேடி

ஒரு அமைதி கூடல் - நீதி தேடி
மாலை 5 மணி, மெரினா கடற்கரையின் காற்று சில்லென வீச, நேரம் இல்லா மனிதர்கள் வாகனங்களில் பறந்து செல்ல, கடற்கரையோரம் காதல் ஜோடிகள் கொஞ்சி விளையாட, சுண்டல் விற்க்கும் கிழவனும், வெள்ளை மல்லிகை விற்க்கும் கிழவியும் தத்தம் காரணதலில் முழ்கி இருக்க அங்கே ஒரு கூட்டம். 


கண்ணகி சிலை அருகே கையில் மெழுகு ஏந்தி கூடி இருந்தது அக்கூட்டம்! 
Jun 26, ஐநாவின் " சித்தரவதைக்கு அட்கொள்ளப்பட  மக்களுக்கான உலக தினம்"   அது.  அதை நினைவாக கொண்டு, ஈழ படுகொலையை கண்டித்து அம்மக்களை நினைவு கொள்ளும் வகையில்  கூடிய கூடம் அது.

ஆயிரகணக்கில் மக்கள் கூட்டம், வரலாறு காணாத கூட்டம் என்றனர் சிலர்! 

 எனக்கோ  சிறு கோபம் லட்சத்தில் கூட வேண்டிய இடத்தில், கோடி கைகள் உயர்த்த பட வேண்டிய இடத்தில் - சில ஆயிரம் பேர் மட்டும். இருப்பினும் வந்தவர் உணர்ச்சி கொண்டவரே, மனித உரிமைக்காக போராடும் எண்ணம் கொண்டவரே. மெழுகு பருத்தி  ஏந்தி ஓர் சிறு நடை, பின்பு ஓர் தற்காலிக நினைவுச்சின்னத்தை சுற்றி அமைதியாக அமர்ந்தது  மக்கள் கூட்டம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு,  கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற   ஒரு சமுகத்தின் நினைவாக - ஈழ மக்களின் நினைவாக - அங்கே பல லட்ச கணக்கில் பலியான மக்களின் நினைவாக கூடியிருந்தது அக்கூட்டம். 

உணர்வுகள்  அவர்களிடம் வேறுபட்டு இருந்தன, இருப்பினும் அவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது - ஒரு படு கொலை கண்டித்து நியாயம் வேண்டிய அவர்கள் கூடி இருந்தனர்.

அங்க ஒரு சில வாலிபர்கள் - " புலிகள் நாங்கள், புலிகள் நாங்கள் ஆயுதம் ஏந்தா புலிகள் நாங்கள். பிரபாகரன் வாழ்க"   என்று குரல் எழுப்பினர். அது அவர்களுது ஆவேச உண்ணர்ச்சி .

எனினும் ஈழ பிரச்சன்னை வெறும் தமிழனது பிரச்சன்னையோ, தனி ஈழ போராட்டம் சார்ந்த பிரச்சன்னையோ , விடுதலை புலிகள் - விடுதலை போரளிகளா அல்லது திவிரவாதிகள? என்பது  பற்றியதோ அல்ல - இது மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்சன்னை, இது இன, மொழி வெறிகொண்டு பல லட்சம் உயிர்கள் பறிக்கப்பட்டு, ஒரு சமூகத்தையே அளித்தது சார்ந்த பிரச்சன்னை. 

இது மனிதன் ஓவ்வருவனும் கையில் போர்க்கொடி ஏந்தி நியாயம் கேட்க வேண்டிய பிரச்சன்னை. இது மனிதனின் பிரச்சன்னை.

கூடியிருந்த கூட்டத்தின் நடுவே ஒரு தெரு கூத்து, கூத்து கலைஞர் கள் அற்புதமாக நடிக்க கண்சிமிட்டாமல் இலங்கையின் ஈழ -இன படுகொலையை கூத்தின் வழியாக கண்டு நெஞ்சம் வருடி பார்த்தது மக்கள் கூட்டம் . 

அந்த சோகம் தாளாமல் வானமும் மேகம் திறந்து கண்ணிற் வடித்து அப்போது .

மீனவ கிழவி, கைகுழந்தையுடன்  தாய், டி -ஷர்ட் பெண்கள்,  இளம் ஆண்கள், கேமரா ஏந்தி மக்களின் உணர்வுகளை பதிவு செய்யும் பூகைபடகார்ர்கள் என அனைவரும் சப்பணம் இட்டு அசையாமல் இருந்தனர் கொட்டும் மழையிலும்!!


எம்மக்களின் உணர்வைகண்டு உள்ளமர மகிழ்ச்சியோடு நானும் நிற்க, வந்தது காவல் துறை  - உரிமம் பெறவில்லையாம் இக்கூடல்ளுக்கு!!
ஒரு மனித உரிமை மீறலை கண்டிக்க மானம் உள்ள மனிதர்கள் கூடுவதற்கு உரிமம்? என்று மாறும் என் சமூகம்? 


கூச்சல்கள், கூக்குரல்கள் பல எலும்பினும், இறுதியில் வென்றது அதிகாரமே!
தெரு கூத்தை அவசரமாக முடித்து கலைந்தது கூட்டம். 

அங்க இருவர், தோழரே என்று தோள் மீது கரம் இட்டு பேசிய இரு ஈழ தமிழன் - இளஞ்செளியனும் , நேசனும். 

                         நேசன் பதினாருவயதில்  தப்பித்து இந்தியா வந்தவன்  - அவன் தாய், அக்காள் என்று பலரை  இழந்தவன்  வீடு சொத்து என அனைத்தும் இழந்தவன். நேசனின் அக்காள் ஒரு விடுதலை புலி ! ........ 27 இலங்கை இராணுவத்தினர் அவளை சூழ்ந்து சுட RPG கொண்டு அவர்களை தாக்கி தன் உயிர் மடித்தவள் - அவள் தீவிரவாதியா? 


எனக்கோ அவள் ஒரு போராளியாக  தான்  தெரிந்தாள். அரசர்கள் காலத்தில் இது நடந்தால், சரித்திரத்தில் நாம் இதை படித்தால் - அவளது வீரத்தை நாம் பெறுமிதம் கொண்டு பேச மாட்டோமோ?


இளஞ்செளியன்  - அவனும் புலிகளை சேர்ந்த ஒரு போராளி அப்போது.
கரும்புலிகள் - பிரபாகரனை காப்பற்றி விட்டதாக அடித்து சொல்லும் ஒரு நம்பிக்கை மனிதன் இப்போது! ........... கடைசி போர்க்களம் வரை கண்டவன். அவன் எந்த கல்லூரியில் படித்தானோ? ...... என்ன அறிவுடன், அழகிய தமிழ் பேசினான் தெரியுமா அவன்?
"   தோளர நீங்கள் இலங்கை தேசம் வந்து பாருங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையும் நாங்கள் பட்ட துன்பங்களும் உங்களுக்கு புரியும். பதுங்கு குழிகளில் கிடக்கும் பிண குவியல்கள் கூறும் எங்கள் சோகக்கதையினை "

"  அங்கே வந்து பாருங்கள் நாங்கள் போரிட்ட திறனை, அங்கே விதி தோறும் நாங்கள் அடித்து வைத்த இலங்கை இராணுவ   டாங்குகளை பாருங்கள் - எங்களிடம் நெருப்பு மனிதர்கள் இருந்தனர் தோழரே "   என்றான் 
மேலும் அவன் கூறுகிறான் ",  நாங்கள் எப்படி பட்ட போராளிகள் தெரியுமா? .... சாவை எதிர்நோக்கி செல்பவர்கள். " யானையறிவு இராணுவ முகமாய் தாக்க செல்கிறார்கள் . 500 பேர் செல்கிறார்கள் செல்லும் போதே 200 சவப்பெட்டிகள் கொண்டு, 'வாடா மச்சான்' என்றுன் சாவை எதிர் நோக்கி செல்பவர்கள் நாங்கள்" என்றான் .

அவன் பிரபாகரனை பற்றி கூறுகிறான் "   விமானங்கள் இருந்தது எங்களிடம் அப்போது ' ரூபன்' விமானம் ஏறி போர்புரிய செல்கிறான் - பிரபாகரன் கோருகிறார் "   ரூபா நீ முன் செல் நம் படையுடன் நான் வருகிறேன் பின்னே, நாம் குண்டு வீச செல்வது இராணுவம் மீது சிங்கள தேசத்து மக்கள் மீது அல்ல!!"

அவன் பேச்சில் வெறி தெரியவில்லை எனக்கு ....... நியாயம் வேண்டி கலங்கி நிற்கும் இதையம் மட்டுமே தெரிந்தது. மக்களை தாக்காதே என்பவன் தீவிரவாதி!!!!!!!!

அப்போ கூண்டு புழுக்கள் என கூட்டம் கூட்டமாய் பிரங்கி கொண்டு மக்களை கொல்பவன் யார் ???????????????????????

நீதி வேண்டாமா ?

எள்ளாளன் காலத்து பகை இது  - ஆயிரம் ஆயிரம் யானைகள் கொண்டு  எள்ளாளன் தலை அறுகப்படன் அன்று. பல ஆயிரம் காலமாக இலங்கையின் தமிழ் அரசர்களும், சிங்கள அரசர்களும் போர் புரிந்து தான் வருகின்றனர். இன்று ராஜபக்ஷே தலைமயில் பல நாடுகள் உதவியுடன் போர் முடிவுபெற்றது.
எப்படி முடிந்தது தெரியமா? - பல லட்சம் உயிர்கள் பலிகொண்டு, அப்பாவி மக்கள் வீடுகள் இடித்து, பதினைந்து வயது சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு ஒரு சமூகமே அளிக்கப்பட்டது முடிந்தது.
 கலைந்தும் கலையாமல் இருந்த சிலருடன் நானும் அமைதியாக நிற்க - நாம் என்ன செய்ய போகிறோம்? இதற்கு நீதி கோர நாம் என்ன செய்வோம் என்று உரையாடல்கள். உண்மையில் என்னோடு அங்கு இருந்த எவரும் அரியர் என்ன செய்வது என்று! கூக்குரல் எழுப்ப நாங்கள் தயார் நீதி கொடுப்பது யார் ?

சர்வதிகார இந்திய அரசை எதிர்த்து உலக சமுதயாம் மறைக்கப்படுகின்ற இந்த அநியாய நிகழ்வை காணுமா? 


காணும் வரை நாம் கூக்குரல் எழுப்புவோம், உலக மக்களுக்கு இந்த செய்தியை எடுத்து செல்லுவோம். உண்மையை, சோகக் கதையை உலகம் முழுவதும் பறையடிபோம்.

அங்க ஒரு ஆப்பிரிக்க மனிதன் - தமிழ் தெரியவில்லை அவனுக்கு, அங்க நடப்பது என்ன  வென்றும் புரியவில்லை அவனுக்கு இருபினும் "   என்ன போலீஸ் இது முக்கியமான நிகழ்வு நாம் செல்ல கூடாது என்றான் ஆங்கிலத்தில்"


அவனுக்கு இருந்த அந்த எண்ணம் இல்லை அங்க சுண்டல் கொறித்து மணலில் விளையாடிய பலருக்கு, அந்த எண்ணம் இல்லை அது சினிமா ஷூட்டிங் என்று காண வந்து ஏமார்ந்து சென்ற சிலருக்கு. 


தன்னலம் கருதியே வாழும் மனித இனம் என்று மாறும்?

ஊர் முழுவதும் ஒன்று கூடி ஏன் வர வில்லை?

சிங்கள மக்கள் என் இதை எதிர்த்து போராடவில்லை? 
( போராடிய ஒரு சிலரும் கொல்லபடுகிறார்களே பின்பு ?)


சிங்கள இராணுவத்தில் ஒருவனுக்கு கூடவா நான் செய்வது தவறு என்று தோணவில்லை?


எப்படி ராஜபக்ஷேவும், அந்த இராணுவ அதிகரர்களும் கண்யருந்து நிம்மதி உறக்கம் கொள்கிறார்கள்? 

அன்று புத்தம் தளைத்த தேசம் இலங்கை - அதுவும் காளி தேவியை வணங்கும் பழக்கம் இருந்த காலத்தில்.
இன்று காலி மட்டுமே குடியிருக்கிறாள் அங்கு!

புத்தனும்  குள்ளன் ஆனான் இலங்கையிலே !!!!!!!!!!!!

உன்கைகள் வெட்டப் படுகிறது, உன் தாய் கொலப்படுகிறாள்!, உன் மகள் கற்பழித்து கொல்லபடுகிறாள்! - அப்போது நீ என்ன செய்வாய் ?
கதற மாட்டாய்? அழுது பொலம்ப மாட்டாய் \? ...... நீதி கேட்டு போராட மாட்டாய்? பின் அது உன் சக மனிதனுக்கு நடந்தால் மட்டும் குருடன் போல் நடிப்பது என் ?

அநியாயம் கண்டு புலம்ப மட்டுமே தெரிந்தவன்  நான்!!
கேள்விகள் மட்டுமே கேட்க தெரிந்தவன் நான்!!

விடைகள் இல்லை என்னடிம் - யாரை நான் குற்றவாளி என்பேன் என்னை தவிரே.

நீயும் என்னை போலவே உணர்ந்தால், என்னுடன் வா ....... மண்டியிட்டு போராடுவோம். இம்மக்களின் நீதிக்காக போராடுவோம். 

அல்லது உனக்காக போராட வேண்டுமா? சொல் நான் என் சகாக்களுடன்  வருகிறேன்.

புண்பட்ட ஒரு நெஞ்சத்துடன், என் இயலாமை கண்டு - சக மனிதனுக்கு உதவ இயலாத என்னை கண்டு - வெட்கி கண்ணீர் வண்டிக்கும்  ----------- 


                                                                                                                                          இராசராசன்


the english version of same is here     http://thealchemycritics.blogspot.com/2011/06/silent-raise-for-cause-of-justice.html .Comments

  1. Srilanka is just another example of genocide and war crimes, but the World nations did not take any step to prevent it..As everyone would say, any war has got its casualities...but the casualty is always in the form of civilians..What happened to all those human rights, who make huge hue and cry for small incidents??Where did the United nations went, when crimes were committed in Srilanka??
    I & people like me, could ask "n" number of questions, but we would get no answers..
    We are in a world, where unless someone dear or near gets affected, we do not give a thought to it:( Unless, such thinking changes, it is difficult for the human race to survive for a long time:(

    ReplyDelete

Post a Comment

Popular Posts