சுதந்திரம்- விடுதலை

சுதந்திரம்- விடுதலையாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் இன்று?
65 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களும் முடிந்துவிட்டன!
உண்மையில் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம்?
அன்று வெள்ளையன் நம்மக்கு அந்நியன்
அதனால் அவனை எதிர்த்து போராடினோம்.

 இன்றோ பரவுகிறது இன்னொரு தீ
இரண்டாம் சுதந்திர தின போராட்டம் இது 
என்று சொல்கிறார்கள்.
இரண்டாம் காந்தியின் போராட்டம் என்றும் சொல்கின்றனர்.

 
இன்று அரசியல் செய்பவர்கள் நமக்கு எதிரிகள்.
உண்மையில் நமக்கு நாமே அடிமைகள்!
காரணம் சொல்லவும் கைகாட்டவும் நமக்கு 
இன்னொருவன் தேவை.

விடுதலை தினம் என்பது என்ன?
வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டு ரசிக்கும் நாள் அதுவோ?
இல்லை இன்று மட்டும் தேசிய கோடியை குத்திக்கொண்டு 
தேசிய கிதம் பாடி கொண்டு தேசம் பத்திய செய்திகள் பேசும் தினமோ?

உண்மையில் நாடு தேசம் பற்றிய புரிகை எத்தனை பேருக்கு உண்டு? 'பேஸ் புக்கில்'  தேசிய செய்தி போடுவதும்,
தேசிய கொடியை படமாய் போடுவதும் 
நம் கடமையை முடிக்குமா?

அல்லது அண்ணா ஹசாரே பற்றி பேசுவது முடியமா?
 உண்மையில் இந்நாட்டின் நடுப்பு மிது 
 நீ கோபம் கொண்டால் உன்னை நீ மாற்று முதலில்.
  உன் அடிமை விலங்கினை உன்னிடம் இருந்து தகர்த்து எறி முதலில்.

சுதந்திர தினந்தன்று என்றோ ஒரு நாள் 
நம்மை எங்கிருந்தோ வந்தவன் அடிமை படுத்தி ஆட்சி செய்தான்
என்பதை எண்ணி வருந்துங்கள். இனி ஒரு நாள் நான் அடிமையாக 
இருக்க மாட்டேன் என்று உறதி கொள்ளுங்கள்.

அந்த அடிமைத்தனம் உண்மையில் விலக 
 நம்மை நாம் மாற்றிகொள்ள வேண்டும்.
லஞ்சம் ஒழிக்க லோக்பால் தேவையில்லை
 லஞ்சம் கொடுக்காத மாந்தர்கள் போதும்.

காலம் காலமாய் புரிதல் இன்றி நாம் வாழ்ந்த 
வாழ்கை இனியும் வேண்டாம் 
ஓர் புது சமுதாயத்தை, தன்னலம் அற்ற பிறர் கென
வாழும்  ஓர் சமுகத்தை படைத்திடுவோம்.

இந்த விடுதலை தினம் அன்று நாடு,
மொழி, மனிதன் பற்றிய ஓர் புரிதலை அடைவோம்.
உண்மை அடிமையாம்   -  அறியாமை, தன்னலம் நீக்குவோம்.
புதிய பாரதத்தை, புதிய சமுகத்தை உருவாக்குவோம்.

Comments

 1. நண்பர உங்கள் கவிதை மிகவும் ஆருமை மற்றும் ‘இந்திய உழல் எதிர்ப்பு’ நிலைய மிக அருமையாக வெளிப்பட்டுள்ளது.

  எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் அனால் பிழைகள் என்னை தமிழ் எழுத தடுக்கிறது

  Someone is Special

  ReplyDelete
 2. purachi karamana kavithai :)
  namathu desa thandai iruinthal ...ungallai kandu perumai knodu iruppaar!

  hats off for the poetry!
  :)

  ReplyDelete
 3. Its high time, we realize that we are slaves even after our freedom...nice thought provoking poem!!!even if one person realizes his duty for the nation, after reading ur blog, its a big achievement pa!!!!
  I would like to state the time, when France won its world cup. The entire nation celebrated as if its independence day!!!Thats the unity shown by the nation everytime!!!
  We should have unity as such in our nation too!!!Most of our time is gone in complaining about the things that goes wrong, rather than considering it as our responsibility to make it proper!!!
  Hope the nation awakes ASAP to break this shackle......

  ReplyDelete

Post a Comment

Popular Posts