காற்றோடு கரைந்த மறவர்களே

முப்பதாயிரம் மாவீரர் மடிந்து
முப்பது வருட போராட்டம் முடிந்ததோ?
அண்டம் எங்கும் லட்சத்து பல மக்கள்
கரையொதுங்கி; பல லட்ச மக்கள் மண்ணினுள்
புதைந்து முடிந்ததோ எங்கள் ஈழ போராட்டம்?

தீவிரவாதம் என தலையில் தட்டி; திவிரவாதி
என்று பெயரும் சாடி; அடுக்குமுறை எதிர்த்து
எம் மக்கள் எடுத்த சுதந்திர போராட்டம்,
தாய் நாடு காக்க ஈழ மக்கள் எடுத்த போராட்டம் முடிந்ததோ?
முப்பது வருட போராட்டம் முடிந்ததோ?

புலம்பெரும் தமிழா நீ ஈழ மண்ணின்று போராடி இர வேண்டாமா?
வன்னியிலும், கிளிநொச்சியிலும் குண்டு மழை என பொழியினும்
ஈழ தமிழா நீ உயிர் இருக்கும் வரை போராடி இர வேண்டாமா?
என அறிவினந்தோர் கேட்பார்?
காலம் பேசும் என் ஈழ மக்களின் தியாகத்தை, களம் பேசும் புலிகளின் வீரத்தை!!!

நம்மை  போன்ற மனிதர்கள்  அங்கு கொல்லப்பட்டனர்
அதிகார வெறி, இன வெறி தமிழ் மக்களின் மேல் பயணம் செய்தது!
இங்கோ நாம் , அங்கொரு போராட்டம், இங்கொரு கூக்குரல் செய்தோம்.
நம் மக்கள் காத்திட நாம் எழுந்திருக்க வேண்டாமோ?; ஈழ போராட்டம்
என்னவென்று அறியா கேடு கேட்ட மாந்தர்கள் இங்கு எத்தனை எத்தனை ?


எல்லாளன்  போர்புரியுனும், பிரபாகரன் போர்புரினும் போராட்ட காரணம் ஒன்றல்லோ?; அடிமையாய் எம் மக்கள் என்றும் வாழ்ந்திடுவாரொ?
வாதாபி படை எடுக்க பல்லவனுக்கு வீர சேனை அனுப்பிய  மக்கள்
எம் மக்கள்; இன்று எவனோ ஒருவன் அவர்களை  கட்டுப்படுத்தினால்
சினம் கொண்டு எழ மாட்டார்களோ?

எது தீவிரவாதம்? தன் மக்கள் உரிமை காக்க முப்படை கொண்டு
போர்புரிதல் தீவிரவாதமா?; தன் மண்ணை, தன் மக்களை தாக்கவரும்
பகைவனை கொன்று குவித்தல் திவிரவதமா?
கரும்புலிகளாக தம் மக்கள் காக்க இன்னுயிர் நீத்த புலிகள் தீவிரவாதியா?
ஈழ போராட்டம் மக்கள் போராட்டம் இல்லையோ?


உண்மை தீவிரவாதி யார் ?; இன வெறி கொண்டு தம் மக்களை
தாமே கொன்ற, பல லட்ச மக்களை அகதி என தஞ்சம் கொள்ள செய்த,
இன்னும் உயிர் பிழைத்த சிலரை கூண்டில் அடைத்து வாழ செய்யும்
ஈன, இன சிங்கள அரசே தீவிரவாதி!!
எத்தனை லட்சம் உயிர்கள் இங்கு பறிபோயின ஐயகோ!!

உண்மை தீவிரவாதி யார்?; ஈழ தமிழனை பகடைக்காயாக
பயன் படுத்தி, தன் அரசியல் நிலைக்கேற்ப கையாண்ட இந்தியாவும்
இந்திய அரசாங்கமும் அன்றோ? பொய் நாடகம் நடித்து கபளம் மட்டுமே
கொண்டு தமிழன தலைவர்கள் தாம் தான் என்று முரசு கொட்டிய
ஈன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அன்றோ உண்மை தீவிரவாதிகள்?


வரலாறு பேசட்டும் உண்மையை,
வரலாறு பேசட்டும் நாம் நம் மக்களுக்கு செய்த துரோகத்தை,
வரலாறு பேசட்டும் இந்தியாவின் ஈன செயலை
வரலாறு பேசட்டும் சிங்கள அரசின் இன வெறியை.
வரலாறு பேசட்டும் ஈழ மறவர்களின் வீரத்தை.

எப்படை எதிர் கொண்டு வரினும், கலங்காமல்
எத்தனை எதிர்ப்பு வரினும் மனம் தளராமல்
மார் உயர்த்தி, தோல் நிமர்த்தி போர் செய்த எம்
மறவர் சேனை செய்த தியாகம் என்றும் அழியாது
ஈழ மண்ணில் காற்றோடு அவர் புகழ் என்றும் விசும்.

ஈழ மண்ணில் வீதிதோறும் மார்தட்டிய அந்த
சுதந்திர வேட்கை அத்தனை சுலபத்தில் அழியாது.
உலகம் ஒரு நாள் உண்மை கண்டுகொளும்.
உலகம் ஒரு நாள் கண்டுகொளும் எம்மரவர்களின் தியாகத்தை,
உலகம் ஒரு நாள் கண்டு கொள்ளும் ஒரு இன படுகொலையை.

காற்றோடு கரைந்த மறவர்களே, அங்கு மண்ணோடு
கரைந்த மறவர்களே, எங்கள் நெஞ்சில் உரமாயிரும்
மறவர்களே, கலங்காதிர். ஈழ போராட்டம் இன்னும் மடியவில்லை.
எம் மக்கள் சம உரிமை கோறி, புலம்பயென்ற அனைவரும்
நாடு திரும்பி தலை நிமுரும் வரை ஓயாது எங்கள் ஈழ போராட்டம் .மாவீரர் தினம் நவம்பர் 26 - மாவீரர்களுக்கு ஓர் சமர்ப்பணம் 

உங்கள் பார்வைக்கு சில காணொளிகள் 
 LTTE battle pledge 
 civil வார் 
 indian peace keeping force and civil war
 srilankan killing fields headlines today documentry 

 இன்றைய அறிமுகம் "நாற்று" .. நிருபன் என்பவரால் எழுதப்பட்டு, பல ஈழ செய்திகளை வெளியிட்டு வருகிறது "நாற்று"

Comments

 1. I liked the analogy which you have compared with "Vathapi"..
  Srilankan war was another example of "how genocide happens openly and how the world is always a keen audience to look at such things and do nothing"...
  Where on earth are all those human right activists?
  neraya vishayam pesa nalla irukkum, but seyala kamikka matanga....srilanka is just another example for it...
  innum velichathukku varatha vishayam evvvlavu irukko :(
  I salute all those brave hearts, who fought for the protection of their community and their rights!!!!

  ReplyDelete

Post a Comment

Popular Posts