என்னோடு வாராயோ ???????

என்னோடு வாராயோ ????????????????
என்னோடு வாராயோ தோழியே?
கரம் பிடித்து, சிரம் பிடித்து வாராயோ?
என்னோடு  வாராயோ தோழியே?
 நம் சமுகத்தின் அழுக்கு திரை நீக்கி,
புதிய தலைமுறை  உருவாக்கிட வாராயோ தோழியே?

என்னோடு   வாராயோ தோழனே?
உன் மார்  உயர்த்தி தோள்  இணைத்து வாராயோ?
என்னோடு வாராயோ தோழனே?
அறியாமை எனும் இருள் நீக்கி,
மனிதனை மனிதனாய்  மாற்றிட  வாராயோ தோழனே?

கைகள் எல்லாம் ஒன்றன இணையட்டும்,
மதிகெட்ட  மாந்தர்களாக இனியும் வாழ்ந்திட
தேவை இல்லை. ஒன்றாய்  இணைந்திடுவோம்
புதிய அறிவினை தேடி, வையம்   எங்கும் பறப்பிடுவோம்.
ஒன்றாய் இணைந்திட வாரீரோ தோழர் தோழியரே?

பிறந்த  பிறப்பின்  பயனனை அறிவோம்;வாழ்க்கையென்பது  
ஓட்டம் அல்ல என  உணர்வோம்.இயந்திரத்தை 
மணந்து இயந்திரமாய் வாழும் வாழ்க்கையை களைவோம்.
இயற்கையை வணங்கி, பிற  உயிர்களை காதலித்து
சக மனிதனின் சிரிப்பில்  சிரித்திட இணைவோம்.

திகட்ட்று  திரியும்  இச்சமூக நிலையை மாற்றி
அன்பும், அறனும்,  அறிவும், காதலும்
நிலவும்  இன்னட்ட்ற ஓர் சமூகம்  படைத்திட
என்னோடு வாராயோ தோழியே?
என்னோடு வாராயோ தோழனே? 
 
Comments

  1. Wonderful Poem!!
    Isn't Tamil a wonderful language :)

    ReplyDelete
  2. tamil is a wonderful language ...........the wonderful language :)

    ReplyDelete

Post a Comment

Popular Posts