வாதாபி 


பன்னிரெண்டாயிரம் களிர்களும்,  இருபத்தாயிரம் புரவிகளும்
எண்ணற்ற  பல்லவ, லங்கை படைஞர்களும்
சூழ நின்றது வாதாபி கோட்டை.
வரும் வழியெங்கும் பல்லவ வெற்றி
சாளுக்கிய படை விரட்டப் பற்றது,
வாதாபி கோட்டைக்குள்  பூட்டப்பற்றது.

பரஞ்ஜோதி 

கலங்கிய  உள்ளமும் , கலங்கா வீரமும்  கொண்டு
எதிரியின் குறுதி வாளினில் கொண்டு.
ஆறா வடுவும் மார்பினில் கொண்டு.
சிங்கத்தை வழிநடத்தும் சிறுத்தை போல
படைகளத்தின் நடுவே அணிகலனுடன் அமர்ந்திருந்தான்.
பகைக்கொண்டு வந்தோர் எல்லாம்
வாள் கொண்டு  புறம் ஓட செய்த அவன் .
காதலின் வலியில் கலக்கம் கொண்டே நின்றான்.

அவன்


உயிரே உன் கோட்டை வாயிலில்
நான் நிற்பதை அறிவாயோ?
படை சூழ வந்து உன்னை எனதாக்க வேண்டிய நான் இங்கு
படை சூழ வந்து உன்  நாட்டை கொள்ள வந்ததை நீ அறிவாயோ ?
விதியின் விளையாட்டை இங்கு வெல்வது  யாரோ ?
காதல் பருகி உனது மடி சாய்ந்து
நான் இசைத்திட  வேண்டாமோ?
ஆனால் வாள் இட்டு உன்னையே
எதிர்த்து போர்றிட நான் துணிந்தேனே!

சொல்லப்படா காதல், உணர்வுகள் கொணராத காதல்.
கண்கள் மட்டுமே பேசி உள்ளம் உணர்ந்த
நம் காதலை நீயும் உணர்ந்தாயோ ?
நம் காதலின்  வலிமையை  இப்போர்க்களம் வெல்லுமோ?
என் வாளின் வீச்சு உன் ஊங்கனோன் -
வாதாபி அரசனை  வெல்லுமோ?
அல்ல இப்போர்களம்  என் உடல் சாய்க்குமோ?
எதுவெனிலும்  அது நான் உன்னை
ஒரு முறை கண்டபின் நடக்குமோ?
புரிந்துகொள்  பெண்ணே நீயே என் காதலி என.

உண்மை தெரிந்து கொள் பெண்ணே.
நான் மண்ணில் வீழ்வதற்கு முன்னே.
உன்னக்கு காதல் பரிசளிக்க என்னிடம் 
கண்ணிர் துளிகளும் இல்லை 
"நான் படை தலைவன் அல்லவே
கண்ணிர் படை தலைவனுக்கு பொருந்துமோ?
மன்னிப்பாய் அடி பெண்ணே
இதோ வருகிறேன் படைகளுடன்
உன் நாட்டினை பலி தீர்க்க.
இதோ வருகிறேன்  நன்பகலில் .............................(Have a glance: I have made a fictious story here based on some true history.


The true facts:
Paranjothi- general in Narashimavarman army and Narashimavarman's close friend potryed as a brave warrior and as one who played major role in Vatapi battle. A Lord Shiva devotee. Became one among the 63 nayanmars later.

Narasimavarman- the great pallava king who established a vast empire. He likely destroyed pulikaesin the Chalukya king.

Vatapi (வாதாபி)- or called as Badami is the capital of Chalukyas.
the famous battle of vatapi is where narasimavarma pallavan destroyed pulekesin and had vengeance over pulikesi's previous raids on Kanchipuram the Pallava capital. he likely to have attacked with over a hundred thousand men

Pulikesi - the Chalukya king, who is very powerful and highly appreciated for his administration. 

Manavarman: the Srilankan prince. He and his army assisted Narashimvarman's army  who was later helped by Narashimvarman's army in Srilanka to regain his throne.

The fiction:
Triloka Parvathi - the brave beautiful intelligent princess who is likely to have born out to Pulikesin and one of his many queens is my fictious character.

the love is again my fiction but who knows? Out of the many princess of Vatapi. Paranjothi could have actually fallen in love with a princess too ;)

 

Comments

Popular Posts