நடை பாதை சித்தன்

 நடை பாதை சித்தன் 


சித்தன் அடி நான் சித்தன் அடி.
காடுமல ஏறிதிரிந்த, முக்காலம் பார்த்துவிட்ட
சித்தன் அடி நான் சித்தன் அடி.
பித்தன் அடி நான் பித்தன் அடி
முப்பொழுதும் பிதற்றுகிறேன், பிறை அன்றும் உளறுகிறேன்.
நான் பித்தன் அடி உனக்கு நான் வெறும் பித்தன் அடி.

அட எல்லாம் தெரிந்த மனிதா,
நான் சொல்லுறத கொஞ்சம் கேளுடா 
தவம் தரித்து, மலை இறங்கி வந்தேன் நானும்.
உன்னபார்த்து உண்மை சில சொல்ல வந்தேன் நானும்.
இங்கு உனக்கு சொல்ல ஒன்னும் இல்லை
தவம் தரிக்கா முனிவனாக மாறிவிட்ட நீயும் இன்று

இந்த சித்தன் சொல்ல கேட்க  உன்னக்கு நேரம் இல்ல
இவன்   பிதற்றும் பிதற்றல்களை கேட்ட உன்னக்கு
நாட்டமும் இல்லை. உண்மை சொல்லுறேன் கொஞ்சம் கேளுடா
உனக்கு உணர்த்த சொல்லுறேன் கொஞ்சம் கேளுடா.
அட ஓடுறவளே கொஞ்சம் நில்லு இங்க;
அட பறக்கிறவனே  கொஞ்சம் நீயும் நில்லுடா.

ஊரெங்கும் பார்கிறேன் இங்கு வித வித மா வண்டி
கலர் கலரா ஓடுது விதம் விதமா புகைக்கிது.
அட ஓடுற ஓட்டத்துக்கு வண்டி தேவ மனிதா
அத நன்கு உணர்ந்த நீயும்.நீ உயிர் வாழ காற்று
தேவ மனிதா அத ஏன்டா நீயும் மறந்த?
அட இந்த சித்தன் சொல்ல கேளுடா...............

ஊருக்குள்ள தேடுறேன், ஆறில்லா  கரையிலையும் தேடுறேன்
இயற்கை வனத்த காணோமே, மருந்து தரும் மரத்தையும் காணோமே!
உண்ம பிதருது, மனச ஏங்க  வைக்கிது.
முன்னேற்றம் சொல்லுற, இயற்கையை தினமும் அளிக்கிற
மரம், செடி எல்லாம் வெட்டி தள்ளுரே, ஆற்றை எல்லாம் தோண்டி
தோண்டி வீடு கட்டுற. சக உயிரினம் வாழ விடாம அளித்து தள்ளுற.

அட பித்து பிடித்த மனிதா, சித்தன் சொல்ல கேளு.
காடு மல ஏறித்திரிந்த சித்தன் சொல்ல கேளுடா.
வீ ட சுத்தி மரங்களையும் நட்டு பழகுடா. 
வேம்பு மரம்,   புன்ன மரம் நட்டு  பாருடா
சுத்தமான  விவசாயம் செஞ்சு பாருடா
நோய் இன்றி சுகமாக  வாழ்ந்து பாருடா

புத்தி கேட்ட மனிதா சித்தன் சொல்ல கேட்டு வாழுடா
இந்த சித்தன் கூறும் கூற்று எல்லாம் உண்மை  தானடா
இதை கேட்க மறந்து ஆடி சென்றால் அழிந்து போவட
உன் பிள்ளை குட்டி அனைத்தும் அன்று இயற்கை இன்றி
தவித்து போகும் டா.சித்தன் அடி நான் சித்தான் அடி.
இந்த சித்தன் சொல்லை கேட்டு வாழுடா ...............

Comments

Popular Posts