இழவு                                      "இழவு"எண்பத்தி ஐந்து வயது கிழவி  அவள்.
நேரம் முடிந்தது நான் செல்கிறேன் என்று,
அயராது உழைத்த உடலை  உறங்க விட்டு
நடுநிசி  நேரம் முன்பு  வானுலகம் சென்றாள்.


நள்ளிரவு  முன்னே கிராமம் சென்றது, அவளை பிரிந்த உடல்.
நேரம் வந்ததெனசொந்த ஊர் வந்தியோ?
நெருங்கிய உறவினை கண்டிடதான் வந்தியோ?
என ஒப்பாரியை தொடங்கியது கிழவிகள் கூட்டம்.


மாமனும், பங்காளியும் நாற்காலி விரிக்க
ஐதையும், சின்னாத்தாளும் தேனீர் பரிமாற
இழவு வீடு துக்கமும் சோகமும் கலந்தே இருந்தது.சின்னதாய்
ஒரு குளியல் போட்டு ஐஸ்பொட்டியில் உறங்க சென்றது  அவள் உடல்.


விடியல் முன்பே மீண்டும் விளித்தது ஒப்பாரி கூட்டம்.
பந்தல்காரன் பந்தல் இட, நாற்காலிகள் வந்து இறங்க
சொந்தமும், பந்தமும் 'ஷேர் ஆட்டோ' ஏறி  'என்றும் மாறாத கிராம
சாலையின் 'குண்டும் குழியையும்' கடந்து வர தொடங்கியது.


 பேரன், பேத்தி, இரண்டாம் பேரன், இரண்டாம் பேத்தி,
ஒன்னு விட்ட, ரெண்டு விட சொந்தங்கள், மகன்கள்,
மருமகள்கள், அண்ணன், அண்ணி, பங்காளி சொந்தங்கள்
உள்ளூர் உறவு, அசலூர் உறவு  என அனைத்தும் வந்து சேர்ந்தது.


எத்தனை சொந்தம் அதற்கு எதனை பெயர்கள்?
"இங்கு தான் நான்  கடை வைத்து உள்ளேன்,
 தாதாவை தெரியுதா?" "  நீ பாண்டி பையனா?,
நானும்  உனக்கு சித்தப்பன் தான்."


எத்தனை சித்தப்பன், எத்தனை மாமன்,எத்தனை ஐதை,
எத்தனை பாட்டன், எத்தனை பாட்டி. ' பங்காளி, பங்காளி மகன்கள்,
அண்ணன், தங்கை, தம்பி, அக்காள்,  சித்தி, சின்னம்மாள்,  பெரியப்பன்,
பெரியம்மாள்' என அத்தனை உறவுகளையும் காட்டி  கொடுத்து விட்டாள் என் கிழவி.


சாராயம் தலைக்கேற ஆட்டம் கொஞ்சம் தூக்கலகா - 'ஒன்னு விட சின்ன சித்தப்பன்',
இழவு வீட்டார் உண்டிட சமைத்து; கொல்லைபுறம் அழைத்த-
'அக்கம் பக்கம் வீட்டார்' என பட்டணம் கண்டிடாத பல விசயங்கள்.
தப்பும் , மேளமும் அடித்தொரைக்க; கிழவியை  சுமந்து செல்ல பாடையும் தயார் ஆனது ஒரு புறம்.


'அரிசியும், தானியமும் சுமந்து; மாலையும், சேலையும் தூக்கி;
தாரை தப்பையுடன் ஊர் மரியாதை செய்தனர் மாமனும், பெண் கொடுத்தோரும்.
தன் ஊர் மாலை பெருசா? அவன் ஊர் மாலை பெருசா என
கிராமத்து வெட்டி பவுசும், குசும்பும் குறையவில்லை அங்கு.


இடுகாடு நேரம் நெருங்க; விரகும் ராட்டியும் அங்கு தயாராக
கிழவி இங்கு தயார் ஆனாள். சீகக்காய்யுடன் ஒரு குளியல் போட்டு,
புத்தாடை அனைத்தும் போத்தி சிங்காரிக்கப்பட்டாள் கிழவி.
 'முறைகள்' எல்லாம் மாலை மரியாதையை செய்தனர்.


'பேரன், பேத்திகள் எல்லாம் நெய்பந்தம் எற்ற வாருங்கள்',
என பரியாரி அழைக்க; 'பொண்டும், நண்டும்' கிராமம் வரை உடுருவிய
 பிளாஸ்டிக் பாட்டில்களை  ரோட்டோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பையோடு
எரிந்து, நெய்பந்தம் எற்ற வந்தனர்.


செய்முறைகள் அனைத்தும் முடியவே, பெண்கள் இறுதியாக கிழவியை வணங்கவே
இடுகாடு நோக்கி பயணம் செய்தால் கிழவி.  மூத்தவன் பந்தம் தூக்க,
சொந்தங்கள் பாடை சுமக்க, யார் இறந்தது என்று கூட தெரியாமல்
சில வாலிபங்கள் ஆட்டம் போட, வெடியும் வேட்டும்மாக இடுகாடு  சென்றாள் கிழவி.


வாய்கரிசி விட்டு, நெத்திக்காசு வச்சு, பானை உடைத்து;
'சனி பொணம் தனியே செல்லாது' என ஏதும் அறியா
பிஞ்சு கோழி தலை உடைத்து;
அயராது உலைத்த உடல் நெருப்புக்கு இறையாக்கப்பட்டது .


'நம் உடன் வாழ்ந்த உயிர் வெறும் கட்டையாக எறிவதை காண்பது கொடூரம்'.
இதுவே என் தமிழ் சமுகம் வழிமுறை. "கோடிகள் பல சேர்த்தாலும்
இருதியில் ஒற்றை காசும் எடுக்கப்பட்டு வெறும் கட்டையாக எரிவாய்.
 - கோடிகள் பல சேர்க்காதே, கோடி  சொந்தங்கள் சேர்த்திடு" என சொல்லும் வழிமுறை.


எறிந்த உடல் ஏறிய,; ஊர் பரியாரியும், வெட்டியானும்,
வெளிஊர் பரியாரியும், வெட்டியானும் வணக்கம் வைத்து காசு பெற்றனர்.
எத்தனை ஆண்டுகள் மாறினாலும், வெட்டியான் பையன் வேதியில்
படித்தாலும் இது மாறது போலவே!


'வழியே ஓடிய வாய்க்காலில், காவேரி நீரில் முழுக்கு போட்டு
திரும்பியது நெருங்கிய சொந்தம்'. வீடும் கலுவியானது,
இழவு சோறும் உண்டு முடிந்தது. வெட்டி பேச்சும்
வாய் சொவ்டாலும் துவங்கியது இப்போது.


"அங்க ஒரு கிழவன், ' நான்  தெரியுமா?, உங்க வயக்காட்டில்
வேலை செய்தவன்!.'" " அவன் தோளை  அனைத்து,' உட்காருங்கள்
என்றேன்,'" ' நான் எல்லாம் உட்கார கூடாது; ஊர் மக்கள்
தப்பா சொல்லுவாங்க', என்றான் கிழவன் - சாதியம்.


"நாம் எல்லாம் அப்பவே நம்ம 'கம்மயுநிட்டி' (சாதியின் புது தமிழ் சொல்)
சார்பா எதாவது ஒரு கல்லூரி தொடங்கி இருக்கனும்"
- ஊர் பெரியோரிடம் 'பெரியார் ' பேசும் என் அப்பன்.
"ஒரு வேலை நான்  மனித 'கம்மயுநிட்டி' இல்லையோ?" 'பெரியார் பேசி என்ன பயன்?'


"போறதால போய் சாப்ட்டு வா , -என் ஒன்னு விட்ட  பெரிய சித்தப்பன்."
குடித்து விட்டு ஆடும் சித்தப்பன் உயர்ந்த சாதி.
எங்க குடும்பத்து விவசாயம் காக்கும் அவன் தாழ்ந்த சாதி.
- சாதியம் இங்கு ஒளியாது.


பெரியாரையும், அண்ணாவையும் வாய்வழியே பேசி இன்றும்
நம்மை ஏமாற்றும் இந்த திராவிட வாதிகளும், திராவிட கட்சிகளும்
ஒழியும் வரை ஒழியாது சாதியம்! பெரியார் கொள்கையும் கனவும்
ஒன்று கூட நிசம் ஆகவில்லை கிராமங்களில்.


இன்றும் சாதியம், சாதிய தெருக்கள், சில கிராமங்களில் சாதிய பள்ளிகள்!!
 சாதி பெருமை பேசும் இளவட்டங்கள். 'புத்தக வரிகள் மறந்து
சாதி சான்று இதழ் ஒற்றை வார்த்தை மட்டுமே
நினைவு கொள்ளும் கூட்டமே  இன்றும் இங்கு நிலவுகிறது'.


இதற்கு அடுத்த வீட்டில் கொலை என்றால் கூட
தொலைகாட்சி பார்த்து தெரிந்து கொள்ளும்
நமது நகரத்து 'பேஸ்பூக்' சமூகம் மேலோ
என தோன தான் செய்கிறது.


எத்தனை அழகு என் தமிழ் சமூகம்!இழவு விடு, கருமாதி முறைகளில் தான் எத்தனை அர்த்தம்.
கருமாதி அன்று மாமன்கள், இழவுவீட்டு ஆண்களுக்கு வெட்டியும் மோதிரமும்
இட்டு  முறை செய்ய வேண்டும் - இழவு வீட்டு பொருளாதார நெருக்கடியை, செலவை
சமாளிக்க உறவுகள் இவ்வாறு  உதவும்.


எவன் எவனோ சொன்னதை ஏற்று
இட்டதையும், தொட்டதையும் தாங்கி
இன்று கேடு பல சுமந்தும் நிற்கிறது
என் தமிழ் சமூகம்.


எது எப்படியோ கிழவி அங்கு எரிந்து முடிந்தாள்.
நாளை ஒரு முறை , பதினாறு நாள் ஒரு முறை,
முப்பது ஒரு முறை என படையல் இட்டு
கிழவியை மறக்க தயாரானது சொந்தங்கள்.


"கிழவி என யார் அழைத்தாலும் கோவம் கொள்ளும் உன்னை 
எத்தனை கிழவி இட்டு அழைத்தேன் இங்கு!
மன்னித்துவிடு உன் பேரனை. வலி என மருத்தவனை செல்லும் 
நாள் வரை உணவு இட்டு,  கூட்டுமாறு செய்யும் நீ என்றும் குமரியே"


"உன்னை போல் ஒரு சொந்தமும் இனி கிடைக்குமோ?
  உன்னை போல் ஒரு உறவும் இனி உதிக்குமோ?" புகைபடம்: 

Paula Bronstein/Getty Images News/Getty Images
http://people.opposingviews.com/anniversary-death-ritual-hinduism-7028.htmlComments

Popular Posts