கடவுள்


ஓர் விரல் நீட்ட சாலைகள் அனைத்தும் பூக்கள் நிறைந்த புல்வெளியாக மாறட்டும்.
இரண்டம் விரல் நீட்ட மனிதனும் பிற உயிரினமும் சமத்துவமாய் வாழ்ந்திடட்டும்.
மூன்றாம் விரல் நீட்ட வற்றாத நதியும், குறையாத வளமும் எங்கும் நிலைத்திடட்டும்.

நான்காம் விரல் நீட்ட ஏற்றமும் தாழ்வும் இல்லாத சமூகம் தோன்றிடட்டும்.
ஐந்தாம் விரல் நீட்ட மகிழ்ந்து பகிர்ந்திடும் மனிதன் மட்டும் இருக்கட்டும்.
ஆறாம் விரல் நீட்ட பசியும், பிணியும் அகன்று போகட்டும்.

ஏழாம் விரல் நீட்ட உண்மையும், நேர்மையும் நிலைத்து நிலவட்டும்.
எட்டாம் விரல் நீட்ட நிறைவான காலையும், முழுமதி இரவும் என்றும் பிறக்கட்டும்.
ஒன்பதாம், பத்தாம் விரல் நீட்ட  அளவற்ற காதலும், என்றும் மாறாத அன்பும் ததும்பி நிறையட்டும்.


மந்திரம் செய்யும் வித்தைக்காரன் அல்ல நான், மாறிட ஆசை.
தந்திரம் செய்யும் மாயகாரனும் இல்லை நான், மாறிட ஆசை.
நினைத்ததை படைக்கும் வல்லமை கொண்ட கடவுளும் இல்லை நான், கடவுளாகவும் மாறிட ஆசை.

 

Comments

Popular Posts